முன்னணி நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இவருடைய நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்த கீர்த்தி
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, தவறுதலாக நடிகர் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்திவிட்டாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கே தெரியாமல் தீடீரென அப்படி நடந்து விட்டது என்று சமீபத்திய பேட்டியில் கீர்த்தி கூறியுள்ளார்.
அதன்பின் மகேஷ் பாபுவிடம் கீர்த்தி மன்னிப்பு கேட்டாராம். அதற்கு மகேஷ் பாபு, ’அதனால் ஒன்றும் இல்லை, தெரியாமல் நடந்த விஷயம் தானே' என்று பெருந்தன்மையாக கூறினாராம்.
