பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கீர்த்தி சுரேஷ்.. காரணம் என்ன தெரியுமா? வெளிவந்த புரோமோ வீடியோ..
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 தமிழில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், வைல்டு கார்டில் நான்கு பேர் என்ட்ரி கொடுத்தனர்.

கடந்த வாரம் கெமி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது.
பள்ளி டாக்ஸ்
இந்த வாரம் பிக் பாஸ் 9 வீட்டில் பள்ளி டாஸ்க் தரப்பட்டுள்ளது. எப்போதுமே பிக் பாஸ் வீடு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் டாஸ்குகளில் ஒன்று பள்ளி டாஸ்க். இதில் அனைவரையும் என்டர்டைன் செய்ய பல வாய்ப்புகள் கிடைக்கும். அதை எப்படி போட்டியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில், இன்று பிக் பாஸ் 9 வீட்டிற்குள் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். தான் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் புரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார் கீர்த்தி.

அதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ: