பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மாடர்ன் உடையில் தாலி தெரியும்படி வந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.
இவர்களுடைய திருமணத்திற்கு விஜய், த்ரிஷா, அட்லீ என பல நட்சத்திரங்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை கீர்த்தியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேபி ஜான். தமிழில் வெளிவந்த தெறி படத்தை ஹிந்தி ரீமேக் தான் இப்படம். இப்படத்தை காலீஸ் என்பவர் இயக்க, அட்லீ தயாரித்துள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில் வருகிற 25ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் தாலி தெரியும்படி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கீர்த்தி சுரேஷ் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்தபுகைப்படங்கள் ..