காமெடி படத்தில் கீர்த்தி சுரேஷ்! இப்படி ஒரு கதையா
கீர்த்தி சுரேஷ் நடித்துக்கொண்டு இருக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகிவுள்ளது..
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியான "மகாநதி" படத்தில் சாவித்திரியாக நடித்திருப்பார். அந்தப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தனால் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதும் கிடைத்தது .
கே.ஜி.எப், காந்தாரா போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்த Hombale நிறுவனம் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது.

காமெடி கதையில் கீர்த்தி..
இந்த women centric படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டு "ரகு தாத்தா" என்று டைட்டில் அறிவித்துள்ளனர். பேமிலி மேன் படத்தின் இயக்குனர், சுமன் குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார். படத்தில் எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி மற்றும் பாலா கிருஷ்ணா நடித்து வருகின்றனர்.
ரகு தாத்தா படம் முழுமையாக குடும்பங்கள் ரசிக்கும் காமெடி படமாக இருக்கும். இந்த படத்தை சம்மரில் ரிலீஸ் செய்வுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளனர்.