திருமணத்திற்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்! எதற்கு பாருங்க
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.
ப்ரோமோ இதோ
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவியில் 'ஸ்டார்ட்டப் சிங்கம்' என்ற ஒரு நிகழ்ச்சியில் தான் கீர்த்தி சுரேஷ் முதலீட்டார்களாக களமிறங்கி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் வித்தியாசமான பொருட்கள் குறித்து விவரித்து அதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும். இந்த நிகழ்ச்சியில் 5 முதலீட்டாளர்களில் ஒருவராக கீர்த்தி சுரேஷும் இடம் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
