தங்க நகையுடன் அழகாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதுமட்மின்றி தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட தெலுங்கில் வெளிவந்த காந்தாரி எனும் சிங்கிள் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அனைவரையும் அசரவைத்திருந்தார் கீர்த்தி.
அவ்வப்போது இணையத்தில் வெளிவரும் கீர்த்தியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும்.
அந்த வகையில் தற்போது புடவை அணிந்து, தங்க நகையுடன் அழகாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

