அண்ணாத்த படத்திற்காக 2 சூப்பர் ஹிட் பட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்!!
கீர்த்தி சுரேஷ்
குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் உருவான சைரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் படம் தோல்வியை தான் தழுவியது.
சூப்பர் ஹிட் படம்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்ததால் கால் ஷீட் கொடுக்கமுடியாமல் போனதாம்.
அதே போல நானியின் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருப்பார். அந்த ரோலில் முதல் முதலில் கமிட் ஆனது கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால் கால்ஷீட் இல்லாததால் அவர் நோ சொல்லிவிட்டாராம்.