ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறாதா..? நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
ஆம், மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியுடன் வேதாள படத்தின் ரீமேக், ரஜினியுடன் அண்ணாத்த என முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இதற்கெல்லாம் முன்பே மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலுடன் இணைந்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருந்தது. இந்த வருடத்தின் இறுதிக்குள் திரையரங்கில் இப்படம் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு பதிலாக, நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இந்த தகவல் தற்போது மலையாள திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.