ஓடிடி-யில் வெளியாகவுள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் எதிர்பார்க்குரிய திரைப்படம்..? ரசிகர்கள் அப்செட்
இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சாணி காயிதம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடி-யில் தான் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் செல்வராகவன், முதல் முறையாக நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், ஓடிடி-யில் இப்படம் வெளியாகும் எனும் செய்தியை அறிந்த பலரும், அப்செட் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.