நடிகை கீர்த்தி சுரேஷிற்காக தென்னிந்திய நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து செய்த விஷயம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
அப்படத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார், ஆனால் அப்படம் எதிர்பார்த்தளவு வெற்றியை பெறவில்லை.
மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாணி காயிதம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து மலையாளத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாஷி, இப்படத்தில் அவர் நடிகர் டோவினோ தாமஸ் உடன் நடித்துள்ளார்.
மேலும் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதனை முன்னணி நட்சத்திரங்களான A.R.ரஹமான், மகேஷ் பாபு, மோகன்லால், அபிஷேக் பச்சன், சமந்தா, திரிஷா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.