தனது 2வது ஹிந்தி படத்தில் இந்த டாப் நடிகருடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த விவரம்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் அவரது நடிப்பிற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் அதையெல்லாம் அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடின உழைப்பு போட்டு படங்கள் நடித்து வந்தார். அப்படி அவர் தொடர்ந்து நடித்து படங்கள் நடித்து ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது மகாநதி என்ற படத்தின் மூலம் தான்.
நடிப்பில் தன்னை நிரூபித்த கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக பாலிவுட் சினிமாவில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்தப்படம்
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ் இப்போதும் படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அடுத்த ஹிந்தி பட வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பாலிவுட் படத்தில் ராஜ் குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.