துளி கூட மேக்கப் இல்லாத லுக்கில் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகி இருக்கிறது. பிரபல தயாரிப்பாளரின் மகள் என்பதால் சின்ன வயதிலேயே அவருக்கு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பல முன்னணி ஹீரோக்களில் படங்களில் கீர்த்தி தற்போது நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவருக்கு விரைவில் திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள் என்றும், அதனால் படங்கள் ஒப்புக்கொள்வதை அவர் குறைத்து வருகிறார் என்றும் சமீப காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அது பற்றி கீர்த்தி எந்த விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
மேக்கப் இல்லாத போட்டோ
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது அவரது போட்டோஷூட் ஸ்டில்கள் மற்றும் அவரது நாய் குட்டியின் போட்டோ வீடியோக்கள் என தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது கீர்த்தி மேக்கப் இல்லாத நார்மல் லுக்கில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். இதோ..