அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

By Yathrika Oct 14, 2025 03:00 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சினிமாவில் நாயகியாக கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் 2013ம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Opens About Her Wedding With Antony

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தனுஷ், சிவகார்த்திகேயன், வி4ய், விக்ரம், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

முன்னாள் கணவரின் உறவினர் கண்ணில் சிக்கிய ரோஹினி, மீனாவிடம் சிக்கினாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ

முன்னாள் கணவரின் உறவினர் கண்ணில் சிக்கிய ரோஹினி, மீனாவிடம் சிக்கினாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ

நடிகை பேட்டி

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை திருமணம் செய்த விஷயம் குறித்து தெலுங்கில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிரபல நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிஷ்யம்முரா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Opens About Her Wedding With Antony

அதில் அவர், என் கணவர் ஆண்டனி தட்டில் சிறப்புமிக்க நபர். நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே ஒருவரையொருவர் நேசித்தோம், ஆனால் அந்த நேரத்தில் எங்கள் வேலைகளில் கவனமாக இருந்ததால் உறவை வெளிப்படுத்தவில்லை.

அவர் கத்தாரில் சொந்த தொழில் செய்து வந்தார், 5 ஆண்டுகள் பார்க்காமல் உறவில் இருந்தோம். நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதலை பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் இருந்தது.

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Opens About Her Wedding With Antony

4 ஆண்டுகளுக்கு முன் என் காதல் விஷயத்தை அப்பாவிடம் சொன்னபோது எந்த கோபமும் இல்லாமல் காதலை ஏற்றுக்கொண்டார். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது, அவருக்காக 15 வருடங்கள் காத்திருந்தேன்.

எங்களது 15 வருட காதல் வாழ்க்கையில் பல தடைகளைச் சந்தித்தோம். ஆனால், அந்த தடைகளை தாண்டி இன்று திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறோம் என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US