எனக்கு திருமணமா? முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் ஓப்பனாக சொன்ன பதில்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கில் தசரா படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கும் நல்ல பாராட்டு கிடைத்தது.
அடுத்து கீர்த்தி சுரேஷ் தமிழில் மாமன்னன் உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்து இருக்கிறார் அவர்.
திருமணமா?
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது ஒருவர் திருமணம் பற்றி கேட்க, அதற்கு பதில் சொல்ல ஒரு வடிவேலு போட்டோவை தான் பதிலாக கொடுத்து இருக்கிறார் அவர்.
ஒரு தொழிலதிபருடன் கீர்த்தி காதலில் இருக்கிறார், விரைவில் திருமணம் என சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இந்த பதிலை கூறி இருக்கிறார்.
நீங்களே பாருங்க..