முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. முதல் முறையாக இணையும் ஜோடி
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது. மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

ராம் சரணுடன் ஜோடியாகும் கீர்த்தி
நடிகை கீர்த்தி அடுத்தது பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வரும் நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வர, இரண்டாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.