கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்- மேக்கப் இல்லாமல் அவரே வெளியிட்ட புகைப்படம்
கொரோனா 3வது அலை ஆரம்பித்ததில் இருந்து பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிந்தால் உடனே சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னுடன் இருந்தவர்களை சிகிச்சை பெற கூறுகிறார்கள்.
அப்படி கடந்த ஜனவரி 11ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த செய்தியை கேட்டதும் சீக்கிரம் நீங்கள் குணமாக வேண்டும் என பதிவிட்டு வந்தனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் இப்போது நோயில் இருந்த குணமாகி விட்டாராம்.
நெகட்டீவ் என்று வந்ததும் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவை பார்த்து ரசிகர்களும் சந்தோஷம் என கூறி வருகிறார்கள்.
'Negative' can mean a positive thing these days. Grateful for all your love and prayers, hope you had a lovely Pongal and Sankaranthi! ?❤️ pic.twitter.com/Sop5wPfBA1
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 18, 2022