அண்ணாத்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் நிராகரித்த படம்! அது இப்போ ஹிட்
நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாக அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. கீர்த்தி தங்கையாக நடித்தது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு முக்கிய படங்களை கீர்த்தி நிராகரித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தான் முதலில் கீர்த்தி நிராகரித்து இருக்கிறார். அதன் பின் த்ரிஷாவுக்கு அந்த வாய்ப்பு சென்று இருக்கிறது.
மேலும் தெலுங்கில் நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினி படத்திற்காக அதை நிராகரித்துவிட்டாராம் கீர்த்தி. அதன் பின் சாய் பல்லவி அந்த படத்தில் நடித்து இப்போது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
அந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri