அண்ணாத்த படத்தால் மேலும் ஒரு சூப்பர் ஹிட் படவாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்..!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றதால் வசூலில் பெரிய சாதனைகளை செய்ய இப்படம் தவறியது என்றே கூறலாம்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்பட்டது.
மேலும் தற்போது நானி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷை தான் அணுகியதாக கூறப்படுகிறது.
'அண்ணாத்த' படத்திற்கு அளித்திருந்த தேதிகளை கேட்டதால் அந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க முடியாமல் போய் விட்டதாம். மேலும் அப்படத்தில் சாய் பல்லவி நடித்துள்ள ரோஸி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.