கீர்த்தி சுரேஷை அசிங்கப்படுத்திய வடநாட்டு பத்திரிக்கையாளர்கள்! அந்த வார்த்தை சொல்லி அழைத்ததால் ஷாக்
தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் நுழைந்து இருக்கிறார்.
அவர் நடித்த பேபி ஜான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த வசூல் வரவில்லை.
டென்ஷன் ஆன கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியில் வந்தபோது அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி அழைத்து இருக்கின்றனர். 'க்ரித்தி' என சொல்லி அவர்கள் அழைக்க, 'க்ரித்தி இல்லை கீர்த்தி' என சொன்னார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு சில போட்டோகிராபர்கள் அவரை 'Dosa' (தென்னிந்திய நடிகர்களை இப்படி தோசை என சொல்லி வடநாட்டில் அழைப்பார்கள்) என அழைத்திருக்கின்றனர்.
அதை கேட்டு கீர்த்தி ஷாக் ஆகி "நான் கீர்த்தி தோசா இல்லை கீர்த்தி சுரேஷ். ஆமாம் எனக்கு தோசை பிடிக்கும்" என கூறி அவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.