தீடீரென அனைவருக்கும் ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா
கீர்த்தி சுரேஷ்
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் ஓடிடி-யில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், தெலுங்கில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் சில மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தற்போது கீர்த்தியின் கைவசம் மாமன்னன், போலோ ஷங்கர், வாஷி, தசரா என பல படங்கள் உள்ளன.
சமீபத்திய பேட்டி
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் " என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு முழு திருப்தி தருவதில்லை. எப்போதும் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று தான் நினைத்துக்கொள்வேன். அதே போல், நான் நடிக்கும் படங்கள் நஷ்டங்களை சந்திக்க கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன் ".

மேலும், " பெரும்பாலும் நான் நடிக்கும் படங்களை நானே பார்க்க மாட்டேன். ஏனென்றால், அப்படி பார்க்கும் பொழுது என்னுடைய தவறு எனது கண்களுக்கு தெரியும். அதனால், இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் " என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தான் நடித்த படங்களை தானே பெரும்பாலும் பார்ப்பதில்லை என்று கூறி, தன்னுடைய ரசிகர்களுக்கு சிறுது ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu