படவாய்ப்புக்காக நடிகைகள் படுக்கைக்கு வரணுமா.. நான் இதைத்தான் செய்வேன்: கீர்த்தி சுரேஷ் அதிரடி
சினிமா துறையில் கதாநாயகிகள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகளை பற்றி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
2015- ஆம் ஆண்டு வெளியான "இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது உதயநிதியுடன் "மாமன்னன்" என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
பாலியல் தொந்தரவு
படவாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் நிலைமையை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.அவர் அளித்த பேட்டியில், "சில நடிகைகள் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளை குறித்து என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு இதுபோன்ற தவறான சம்பவங்கள் என் வாழ்வில் நடக்கவில்லை.
மேலும் படவாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நெருங்கி பாலியல் தொந்தரவு கொடுத்தால், அந்த படவாய்ப்பை உதறி தள்ளி விடுவேன்.திரைத்துறையில் இருந்து விலகி வேறு தொழில் செய்வேன் என பேட்டியளித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிரபல நடிகை, ஜனனி கட்டிப்பிடித்து கொடுத்த போஸ்