தன்னை Troll செய்தவர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ- என்ன கூறியுள்ளார் பாருங்க
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முக்கியமாக பார்க்கப்படும் ஒரு முன்னணி பிரபலம். 2013ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் டாப் நாயகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றார்.
தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே மாறிவிட்ட அவர் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்த 10 வருடங்கள் ஆன நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பத்து ஆண்டுகள் முடிவு அடைந்தாலும் இப்போதுதான் எனது திரைப் பயணம் தொடங்கியது போல் இருக்கிறது என்றும் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது என்றும் தெரிவித்தார்.
மேலும் என்னுடைய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், மீடியா மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் என்னைக் கேலி கிண்டல் செய்தவர்களுக்கு நன்றி என்றும் அவர்களுடைய விமர்சனங்கள் தான் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
