முன்னணி நடிகையுடன் மீண்டும் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யார் அந்த நடிகை தெரியுமா
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக பென்குயின் படம் நேரடியாக OTT-ல் ரிலீஸ் ஆகியிருந்தது.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள அண்ணாத்த படம், தீபாவளிக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில், அவர் நடிக்க போகும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் நானியுடன் தசரா எனும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தி ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் சுவாரஸ்யமான மற்றோரு தகவல் என்னவென்றால் இதில் கீர்த்தியுடன் நடிகை சமந்தாவும் நடிக்கவுள்ளது தான்.
இருவரும் இணைந்து ஏற்கனவே பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப்படமான மகாநடியில் கடந்த நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடித்திருந்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கீர்த்திக்கு கிடைத்திருந்தது.
எனினும் சமந்தா மற்றும் கீர்த்தி இணைந்து நடிப்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.