நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்-ம் இப்படி செய்யபோகிறாரா? அப்படி அது என்ன விஷயம் தெரியுமா, இதோ
நயன்தாரா
நடிகை நயன்தாரா இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், முதல் முறையாக ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலமாக தான் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் எண்ட்ரி
இந்நிலையில், நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்-ம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். வருண் தவானின் நடிப்பில் உருவாகும் அவருடைய 18வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் எண்ட்ரி கொடுக்க போகிறார் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது வருண் தவானின் 18வது படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என தெரியவந்துள்ளது.

பிரபல இயக்குனர் காலீஸ் தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
நான் இன்னும் கர்ப்பம் ஆகல.. திருமணம் பற்றி கேட்டதற்கு டாப்ஸி சொன்ன பதில்