திருமணத்திற்கு பிறகும் படுபிஸியான கீர்த்தி சுரேஷ்.. முக்கிய ஹீரோ படத்தில் ஒப்பந்தம்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த வருட இறுதியில் அவர் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து அவர் ஹனிமூன் கூட செல்லாமல் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார்.
அடுத்து ரன்பீர் கபூர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது.
இன்னொரு படம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சுரேஷ் தற்போது மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா உடன் ஜோடியாக கீர்த்தி நடிக்க இருக்கிறார்.
Rowdy Janardhan என்ற படத்தில் தான் அவர்கள் ஜோடி சேர இருக்கின்றனர். ரவி கிரண் கோலா இயக்கத்தில் இந்த படம் வரும் மே மாதம் தொடங்குகிறதாம்.