முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான டாப் படங்கள்.. என்னென்ன?
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார்.
ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், கீர்த்தி நடிப்பில் வெளியான சில சிறந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
நேனு சைலஜா:
டோலிவுட் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படம் இது. முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.
மகாநடி:
சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இந்த படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார்.
நேனு லோக்கல்:
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
தசரா:
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.