துளி கூட மேக் அப் இல்லை! என தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் செம பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ ஷங்கர் படத்திலும் தசரா என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பதிவிட்ட புகைப்படம்
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது பதிவுகள் வெளியிடவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக் அப் ஏதும் இல்லாமல் ஒர்க் அவுட் செய்தவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் #nofilter என்ற ஹாஷ்டேக்-யும் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த புகைப்படம்
விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர்