விடுதலை 2 படத்திற்காக கருணாஸ் மகன் செய்த செயல்.. வாயடைத்து போன வெற்றிமாறன்
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விடுதலை 2, கலவையான விமர்சனங்களை பெற்றது.
படத்தின் முதல் பாதியில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்துள்ளார். இந்நிலையில், விடுதலை படத்திற்காக கென் செய்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
செய்த செயல்
அதில், " விடுதலை படத்தின் கதையை கேட்ட பின் கருப்பன் கதாபாத்திரத்திற்கு உடல் எடையைக் கூட்டினால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதனால் எடையைக் கூட்ட டையட் பின்பற்றி எடையைக் கூட்டினேன்.
அதை கண்டு வெற்றிமாறன் சார் "என்ன பார்க்க பெரிய பையன் போன்று இருக்கிறாய்" என்று கேட்டார். நான் படத்திற்காக தான் என்று கூறிய பின் ஓகே என்றார். அவரிடம் இருந்து அந்த வார்த்தையை கேட்பது பாராட்டு வாங்குவது போன்றது" என்று தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
