யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா?

By Yathrika Sep 24, 2026 04:30 AM GMT
Report

கென் கருணாஸ்

கென் கருணாஸ், பிரபலத்தின் மகன் என்றாலும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றவர்.

அசுரன் படத்தில் தனுஷின் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டுக்களை பெற்றார். பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த கென் கருணாஸ் யூத் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? | Ken Karunas Next Movie As A Hero Details

தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் என பலர் நடித்த இப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது.

பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளை , காதல் , ஏமாற்றம் என நகைச்சுவை கலத்த திரைப்படமாக இருப்பதால் இந்த படத்தை பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

படமும் செம ஹிட், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.

யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? | Ken Karunas Next Movie As A Hero Details

அடுத்த படம்

யூத் படத்தின் மூலம் தனது வெற்றியை கண்ட கென் கருணாஸ் இப்போது ஹீரோவாக நடிக்க அடுத்தப்படத்தை தேர்வு செய்துவிட்டார்.

விஷ்ணு விஷாலின் நடிப்பில் அண்மையில் வெளியாகி செம வெற்றிப்படமாக அமைந்த கட்டா குஸ்தி பட புகழ் செல்லா அய்யாவு இயக்கத்தில் தான் கென் கருணாஸ் அடுத்தப்படம் நடிக்கிறாராம்.

யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? | Ken Karunas Next Movie As A Hero Details

முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்பட கதை கென் கருணாஸ் குடும்பத்திற்கு மிகவும் பிடித்துள்ளதாம், கதையை கேட்கும் போதே விழுந்து விழுந்து சிரித்து ரசித்துள்ளார்களாம்.

யூத் பட புகழ் விக்கி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US