வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கென் கருணாஸ் யூத் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
யூத் திரைப்படம்
நடிகர் கருணாஸின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கென்.
கருணாஸ் படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து விடுதலை 2 படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் இயக்கத்தில் இறங்கிவிட்டார்.

ஓடிடி ரிலீஸ்
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் யூத், கடந்த மார்ச் 19ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
கென் கருணாஸுடன் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பள்ளி பருவ கால காதலை மையப்படுத்திய ஒரு ஜாலியான படம் தான் யூத். இதுவரை ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan