கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்.. ரவி மோகன் பிறந்தநாளுக்கு கெனிஷா வைரல் பதிவு!
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது என பிஸியாக வலம் வந்தவர் நடிகர் ரவி மோகன். கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது.
தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோகோடு (Brocode) என்ற படத்தை தயாரித்துள்ளார்.
வைரல் பதிவு!
இந்நிலையில், இன்று தனது 45 - வது பிறந்தநாளை கொண்டாடும் ரவி மோகனின் நெருங்கிய தோழியும் பாடகியுமான கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி மோகன், பியானோ வாசிக்கும் வீடியோவைப் பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,