தற்கொலை செய்து கொண்ட நடிகையின் டைரி சிக்கியது! கணவர் செய்த கொடுமைகள்
கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு சஹானா என்கிற நடிகை வீட்டில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் செய்த கொடுமைகள் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என அவரது அம்மா புகார் கூறி இருந்தார்.
அதற்கு பிறகு வீட்டில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சஹானாவின் கணவர் சஜாத் கைது செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகையின் டைரி அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
திருமணமான சில நாட்களில் இருந்தே தினமும் டைரி எழுத தொடங்கி இருக்கிறார் அவர். அப்போது இருந்தே கணவர் செய்த கொடுமைகள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

கொடுமைகள்
அடிப்பது, பட்டினி போடுவது என கணவரும் அவரது குடும்பத்தினரும் கொடுமை படுத்தி இருக்கிறார்கள். சில நாட்களில் இரண்டு ரொட்டி துண்டு மட்டுமே சாப்பிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கணவர் சஜாத் தன்னை அதிகம் அடித்துவிட்டதாகவும் ஒரு நாள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரை நம்பி தான் இந்த வீட்டிற்கு வந்தேன், ஆனால் இப்போது இப்படி கொடுமை படுத்துகிறார் என எழுதி இருக்கிறார் சஹானா.
அந்த டைரியை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu