அபார்ட்மெண்டில் பிணமாக கிடந்த 26 வயது நடிகை! தொடரும் நடிகைகள் மரணம்
சினிமா துறையை சேர்ந்த நடிகைகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மரணம் அடைவது பற்றிய செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கேரளாவில் நடிகை சஹனா என்பவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொண்டார். அவரது கணவர் கொடுமை தான் காரணம் என தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து பெங்களூரில் சேத்தனா ராஜ் என்ற ஒரு நடிகை உடல் கொழுப்பு குறைய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் சில மணி நேரத்தில் பலியானார். அவரது மரணத்திற்கு medical negligence தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் ஒரு நடிகை மரணம் என செய்தி வந்திருக்கிறது. 26 வயதான ஷெரின் செலின் மேத்யூ என்ற அந்த நடிகை வீட்டில் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் பிணமாக இருந்திருக்கிறார்.

Chakkaraparambu பகுதியில் இருக்கும் அபார்ட்மெண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது ரூம்மேட்ஸ் தான் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை முதலில் பார்த்திருக்கின்றனர். போலீஸ் அவரது மரணத்திற்கான காரணத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu