கேரளாவில் உருவான மாஸ் ரசிகர்கள் கூட்டம், 100 நாட்கள் ஓடிய முதல் விஜய் திரைப்படம்!

Vijay thalapathy vijay TMT thullatha mannamum thullum
By Jeeva Jan 29, 2022 09:00 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம், ஆனால் அதேபோல் கேரளாவிலும் விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அவருக்கு அங்கு இந்தளவிற்கு மாஸ் உருவாக முக்கிய காரணமாக இருந்த முதல் திரைப்படமே துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் தான்.

கேரளாவில் பெரிய வரவேற்பை பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் தான் அங்கு 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றுடன் இப்படம் வெளியாகி 23 வருடம் ஆகியுள்ளது, இதனால் ரசிகர்கள் இணையத்தில் #23yearsofThullathamanamumthullum என்ற ஹாஷ் டேக்வுடன் கொண்டாடி இப்படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.  

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US