Kgf 2 படத்திற்காக 5 வருடங்களாக யஷ் செய்த விஷயத்தை மாற்றிய யஷ்- வைரல் வீடியோ
தமிழ் சினிமா ரசிகர்கள் இங்கே வெளியாகும் படங்களை தாண்டி மற்ற மொழி படங்களையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் இந்த கொரோனா காலத்தில் அதிகம் மற்ற மொழி படங்களை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள், மொழி புரியாது என்றாலும் இருக்கவே இருக்கும் சப் டைட்டில்.
யஷ் நடித்த KGF
2018ம் ஆண்டு யஷ் நடிக்க கன்னட சினிமாவில் KGF என்ற திரைப்படம் வெளியானது. பிரகாஷ் நீல் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராக ரூ. 250 கோடி வரை வசூலித்தது. கன்னடத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக செம ஹிட்டடித்தது.

KGF 2
இப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்தது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2 நாட்களில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இப்படங்களுக்காக யஷ் தாடி-மீசையுடன் 5 வருடங்களாக இருந்துள்ளார்.
வைரல் வீடியோ
இப்போது திரையரங்குகளில் யஷ் நடித்த KGF 2 வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது Kgf படங்களுக்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக தாடி-மீசையுடன் இருந்த யஷ் ஒரு வழியாக அதை எடுத்து வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த வீடியோ 2020ம் ஆண்டே வெளியாக இப்போது திடீரென டுவிட்டரில் வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்