கேஜிஎப் 2 படத்தில் பெரிய தவறு.. தமிழ் ரசிகர்கள் ஷாக்
பீஸ்ட் உடன் மோதினாலும் தற்போது கேஜிஎப் 2 படம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ் சாதனை
இரண்டு நாட்களில் இந்தியாவில் 240 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது கேஜிஎப் 2 படம். உலக அளவில் மொத்த வசூல் 300 கோடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் இந்த படம் மேலும் பல சாதனைகள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டிலில் தவறு
இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 தமிழ் டப்பிங்கில் படம் பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக் ஆகி இருக்கின்றனர். அதற்கு காரணம் டைட்டிலில் இருக்கும் தவறு தான்.
தமிழில் சேப்டர் என்ற வார்த்தையில் இருக்கும் தவறை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு பெரிய படத்தில் இதை கூட கவனிக்காமல் விட்டுவிட்டார்களே என விமர்சித்து வருகின்றனர்.
Found mistake in title card of KGF Chapter 2 in Tamil #KGF #KGFChpater2 #PrashanthNeel @TheNameIsYash @prashanth_neel it's (Chapters 2 சேப்டர் 2) Change it as soon as possible #kgf @hombalefilms @HombaleGroup @LahariMusic @TSeries pic.twitter.com/jEnAzf7mPk
— RABI PRAKASH (@_asrp) April 15, 2022