Kgf 2 படத்தின் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதுமான தெறிக்கும் முழு வசூல் விவரம்- கலக்கும் யஷ்
ஒரு கன்னட சினிமா படம் இந்திய அளவில் ஹிட்டாக ஓடுகிறது என்றால் அது Kgf 2 படம் தான். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாம் பாகம் எடுக்க படக்குழுவிற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி படம் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

படத்தின் வசூல்
தமிழகத்தில் பீஸ்ட் படம் விமர்சனங்களால் வசூலில் அடிவாங்க இப்போது Kgf 2 தான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 5 நாட்களில் உலகம் முழுவதும் படம் செய்த வசூல் ரூ. 600 கோடிக்கும் மேலாக இருக்கும் என்கின்றனர்.
தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும் Kgf 2 படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் இதுவரை Kgf 2 ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.