கேஜிஎப் 2 பிரம்மாண்ட அறிவிப்பு! பீஸ்ட் டீம் பக்கம் திரும்பும் விஜய் ரசிகர்கள்
யாஷ் நடித்த கேஜிஎப் படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் பெரிய ஹிட் ஆனது. அதனால் இரண்டாம் பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப் 2 திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் ரசிகர்கள் எல்லோரும் படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என்று தான் காத்திருந்தனர். அதற்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது.
மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு கேஜிஎப் 2 ட்ரைலர் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தான் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளிவரும் என எதிரார்க்கப்டுகிறது. கேஜிஎப் ட்ரைலர் பற்றி அறிவித்துவிட்டார்கள், ஆனால் பீஸ்ட் பற்றி ஒரு அறிவிப்பு கூட வரவில்லையே என விஜய் ரசிகர்கள் கேட்க துவங்கி இருக்கின்றனர்.
There is always a thunder before the storm ⚡#KGFChapter2 Trailer on March 27th at 6:40 pm.
— Hombale Films (@hombalefilms) March 3, 2022
Stay Tuned: https://t.co/QxtFZcv8dy@Thenameisyash @prashanth_neel@VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7
#KGF2TrailerOnMar27 pic.twitter.com/4TBuGaaUKh