பிக்பாஸ் போட்டியாளராகும் கே.ஜி.எப் பட ஹீரோவின் தாயார்..! வெளியான சூப்பர் தகவல்..
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த 17 தேதி முடிவடைந்தது, அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர், ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் கன்னடாவின் சீசன் 8 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்கவுள்ளது, மேலும் இந்த நிகழ்ச்சியை கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார்.
இதனிடையே கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யஷின் அம்மா புஷ்பா, பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்..