கே.ஜி.எப் 2 படத்தை விட குறைவாக வசூல் செய்த பீஸ்ட்.. விஜய்யின் கோட்டையில் மாஸ் காட்டிய ராக்கி பாய்
கே.ஜி.எப் 2 - பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் மற்றும் யாஷின் கே.ஜி.எப் 2 இரு திரைப்படங்களும் ஒரு நாள் இடைவெளியில் வெளிவந்தது.
பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதன் காரணத்தினால், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால், கே.ஜி.எப் 2 திரைப்படம் பக்காவான மாஸ் கமெர்ஷியல் படமாக ரசிகர்களுக்கு பிடித்தவாறு அமைந்திருந்ததால், அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் வசூல் கோட்டையில் ஒன்று கேரளா. இதில் விஜய்யின் படங்கள் வசூலின் உச்சத்தை தொடும்.
ராக்கி பாய் வசூல் வேட்டை

இந்நிலையில், நேற்று வரை கேரளா பாக்ஸ் ஆபிசில் ரூ. 10 கோடி மட்டுமே பீஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
ஆனால், கே.ஜி.எப் 2 திரைப்படம் நேற்று வரை சுமார் ரூ. 35 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.