கே.ஜி.எப் படத்தில் இருந்து வெளியான மாஸ் போஸ்டர்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த படக்குழு
இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய படங்களில் ஒன்று கே.ஜி.எப். இதில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி, வெளியாக காத்துகொண்டு இருக்கிறது. இதில், யாஷுடன் இணைந்து, ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளிவைத்தது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதம், கிறித்துமஸ் பண்டிகையை ஒட்டி இருக்கும் என்றும், அந்த அறிவிப்பை நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று படக்குழு வெளியிடும் என்றும் தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில் சஞ்சய் தத் பிறந்தநாள் ஆன இன்று, கே.ஜி.எப் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சஞ்சய் தத்தின் லுக் மட்டுமே இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி இல்லாத காரணத்தினால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
