மாஸ்டர் படத்துடன் வெளியாகவுள்ள கே. ஜி. எப் படத்தின் டீஸர், வெளியான அதிகாரப்பூர்வமான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதேமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் திரையரங்கில் 50% இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 100% இருக்கைகள் குறித்து தமிழக முதலவரை சந்தித்து பேசினார் தளபதி விஜய்.
அதனை தொடர்ந்து தமிழத்தில் திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடைவேளையின் போது பிரபல கன்னட யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கே. ஜி. எப் 2 படத்தின் டீஸரும் வெளியாக உள்ளதாம்.இதனால் தற்போது இருதரப்பு ரசிகர்களும் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.