விஜய் ரசிகர்கள் பயந்தது போல நடந்து விட்டது ! KGF 2-விற்கு அதிகரிக்கும் திரையரங்குகள்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக 13 ஆம் தேதி அன்று வெளியானது.
மேலும் இப்படம் வெளியானதில் இருந்து அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றுள்ளது. இதனால் வரும் பீஸ்ட் பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF 2 திரைப்படம் பிரமாண்டமாக வெளியானது. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான KGF 2 திரைப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வருகிறது.
இதனிடையே தற்போது KGF 2 திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஸ்க்ரீன்ஸ் மற்றும் ஷோ கவுண்ட் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வியாபாரத்தில் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியிருப்பதால் அதிக நாட்கள் படம் திரையரங்கில் ஒட்டப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.