Kgf2, RRR படத்தை விட நேற்று வசூலில் குறைந்துள்ள விஜய்யின் பீஸ்ட்- கடும் சோகத்தில் ரசிகர்கள்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமா வசூல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் அனைவரும் நினைத்தார்கள்.
ஏன் சினிமா வட்டாரத்தில் கூட படம் பெரிய அளவில் சாதனை செய்யும் என நினைத்தனர்.
படு தோல்வியில் பீஸ்ட்
ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து படு மோசமான விமர்சனங்கள், வசூலை பெற்று வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள்.
வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே படத்திற்கு வசூல் குறைகிறது, பல இடங்களில் பீஸ்ட் பதிலாக KGF 2 அதிகம் திரையிடப்படுகிறது.
படத்தின் நேற்றைய வசூல்
பீஸ்ட் படத்தின் ஹிந்தி பதிப்பின் வசூல் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் பீஸ்ட் படத்தின் ஹிந்தி பதிப்பு ரூ. 15 லட்சம் வசூலித்துள்ளது.
KGF 2 ரூ. 44 கோடியும், RRR ரூ. 3 கோடியும் வசூலித்திருக்கிறது.
பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த ரியாக்ஷன் ! அமையுமா நெல்சன் - சூப்பர் ஸ்டார் கூட்டணி..