விஜய்யை முதன்முதலாக நேரில் சந்தித்த குஷ்பு மகள்கள் செய்த காரியம்- நடிகை சொன்ன விஷயம்
நடிகை குஷ்பு 80களில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர். குஷ்பு இட்லி, கோவில், குஷ்பு புடவை என அவர் பெயரில் வராத விஷயமே இல்லை என்று கூறலாம்.
அரசியலில் முழு ஈடுபாடு காட்டிவரும் இவர் சினிமாவில் ஆக்டீவாக இருக்கிறார். சீரியல் நடிப்பது, தயாரிப்பது, சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார்.
அண்மையில் அவர் குண்டான தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது பிரபலங்களுக்கும் வியப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு ஒரு பேட்டியில் பேசிய விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகை குஷ்புவின் மகள்கள் இருவருமே விஜய்யின் தீவிர ரசிகைகளாம்.
விஜய்யை நேரில் சந்திக்க மகள்களை அவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது தளபதியை சந்தித்த அவரது மகள்கள் இருவருமே குஷ்பு பின்னால் ஒளிந்துகொண்டார்களாம்.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu