குஷ்பூ சொன்ன ஒரு வார்த்தை.. பூரித்து போன பிக் பாஸ் கவின்
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் கவின். அவர் அதன் பிறகு பிக் பாஸ் போட்டியாளராக வந்து அதிகம் ரசிகர்களை பெற்றார். அதன் பின் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.
நேரடியாக ஓடிடியில் வெளியான அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. தற்போது அவர் ஆகாஷ்வாணி என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். அது ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.
சமீபத்தில் தான் ஆஹா தளத்தின் துவக்க விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகை குஷ்பூ கவின் பற்றி பெருமையாக பேசினார். அவர் ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பூ கூறியதும் கவின் பூரிப்பானார்.
நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் என கவின் அதன் பிறகு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Wishing the best to you Kavin. #AkashVaani is looking very promising and entertaining. Congrats to you and the entire team. ❤?? @Kavin_m_0431 https://t.co/QsPFO5AGcq
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 11, 2022