நடிகை குஷ்பூ கன்னத்தில் அறைந்தது யார்? போட்டோவால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்து அதன்பிறகு சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. அவர் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ ஒரு தேசிய கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
குஷ்பூ இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இன்று அவர் கன்னத்தில் யாரோ அறைந்தது போன்ற அடையாளத்துடன் போட்டோ வெளியிட்டு "Say No To Violence" என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி ஆகி என்ன ஆனது என கேட்டு வருகின்றனர்.
உண்மை என்னவென்றால் குஷ்பூ தற்போது மீரா என்ற ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த தொடரின் போட்டோ தான் அது. விரைவில் ஒளிபரப்பை தொடங்க இருக்கும் அந்த சீரியலின் கதையை குஷ்பூவே எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க்கது.