என் செருப்பு சைஸ் 41 அடிவாங்க தயாரா.. படுமோசமான கமெண்ட்டுக்கு குஷ்பூ பதிலடி!
குஷ்பூ
80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக் கூடிய குஷ்பு இதன்மூலம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க சுந்தர். சி இயக்க படம் உருவாக இருந்த நிலையில், சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சுந்தர். சி விலகி விட்டார்.
இந்த அறிவிப்பு வெளிவந்தது முதல் நெட்டிசன்கள், விஜய் ரசிகர்கள், தவெகவினர் என பலரும் படுமோசமான கமெண்ட்டுகளை பதிவிட தொடங்கிவிட்டனர்.
குஷ்பூ பதிலடி!
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பூ போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
Yen seruppu size 41, adi vaanga thayaara??
— KhushbuSundar (@khushsundar) November 15, 2025