இப்படியும் ஏமாற்றுவார்களா.. நடிகை குஷ்பு பெயரில் நடந்த மோசடி
நடிகை குஷ்பு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். அவர் இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிறகு டிவி சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வரும் குஷ்பு, அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தயாரிப்பாளராகவும் சுந்தர்.சி உடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார்.

மோசடி
தன்னுடைய பெயரில் போலியாக ஈமெயில் ஐடி ஒன்றை உருவாக்கி அதில் இருந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு மெசேஜ் செய்து சிலர் மோசடி செய்து வருவதாக நடிகை குஷ்பு தற்போது ஆதாரங்களுடன் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிரபலங்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்காக இப்படி மெசேஜ் அவர் அனுப்புவதாக அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் இருக்கிறது.
ஆனால் அது நான் இல்லை, நான் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமென்றால் வழக்கம் போல போன் தான் செய்வேன். இதை யாரும் நம்பாதீர்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். அவரது பதிவு இதோ.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri