குஷ்பு மகள்கள் முகத்தை பற்றி வந்த மோசமான ட்ரோல்! அவங்களையாவது விட்டு வைங்க என பதிலடி
குஷ்பூ
நடிகை குஷ்பூ தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வெளிப்படையாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரை மோசமாக ட்ரோல் செய்து ட்வீட்களும் அதிகம் வரும். அவர் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
மேலும் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
மகள்கள் பற்றிய ட்ரோல்
சமீபத்தில் குஷ்பூ அவரது இரண்டு மகள்களின் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஒரு நபர் 'இவர்கள் இருவருமே மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள்' என ட்ரோல் செய்து இருக்கிறார்.
அதற்க்கு பதிலடி கொடுத்த குஷ்பூ "20 மற்றும் 22 வயதாகும் பெண்கள் எதற்காக சர்ஜரி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளையும் ட்ரோல் செய்வது வெட்கக்கேடு. குழந்தைகளையாவது விட்டு வைங்க" என அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
Both have done nose surgery?
— prasanga (@tripshot88) February 13, 2023
Why would a 20 and a 22 yr old go under a knife?? It’s a shame when children are part of trolling. At least spare the kids. https://t.co/wJ3NSME5aN
— KhushbuSundar (@khushsundar) February 13, 2023
அயலி பட அம்மா நடிகையா இப்படி? வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்